சியமாங் குரங்குகள், உடும்புகள் பறிமுதல்

சியமாங் குரங்குகள், உடும்புகள் பறிமுதல்

1 mins read
df942651-f333-4a75-acaf-82e0c3adfd43
சியமாங் குரங்கு. - படம்: ஊடகம்

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட நான்கு சியமாங் குரங்குகள் மற்றும் 52 உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளின் உடைமைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களில் பெண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் சென்னைக்கு இரண்டு பெரிய பெட்டிகளுடன் வந்திருந்தார்.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது இரண்டு கூடைகளில் 52 அரிய வகை பச்சை உடும்புகள், இந்தோனீசிய காடுகளில் வாழும் சியமாங் குரங்குக் குட்டிகள் நான்கும் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்