தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை மெட்ரோ ரயில்: செப்டம்பரில் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்பனை

1 mins read
8590ebb4-675a-4012-8a70-ed60eca5a0e8
அதிகபட்சமாக செப்டம்பர் 4ஆம் தேதி 3 லட்சத்து 97,217 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. - படம்: இணையம்

சென்னை: செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்கப்பட்டதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கடந்த மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46,769 முறை பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்டம்பர் 4ஆம் தேதி 3 லட்சத்து 97,217 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“சிங்காரச் சென்னை அட்டையைப் பயன்படுத்தி 51 லட்சத்து 96,904 பயணிகள், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 1 லட்சத்து 15,651 பயணிகள், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48 லட்சத்து 34,214 பயணிகள், வாட்ஸ்அப் மூலம் 5 லட்சத்து 65,381 பயணிகள் பயணம் செய்தனர்,” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்