சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட விரிவாக்கம்: அக்டோபர் 11 திறப்பு

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட விரிவாக்கம்: அக்டோபர் 11 திறப்பு

கோப்புப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

26 Sep 2026 - 3:52 pm

1 mins read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில், முதல்கட்டமாக 14.6 கிலோ மீட்டர் தூரத்திற்கான வழித்தடம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது.

இச்சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாம் கட்டத் திட்டத்தின் நான்காவது வழித்தடத்தில் (மஞ்சள் பாதை) அமைந்துள்ள பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான இப்பகுதியில் வணிக ரீதியிலான ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் மேற்கு புறநகர்ப் பகுதிகளை நகரின் பிற முக்கியப் போக்குவரத்து கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வடபழனியில் பயணிகள் எளிதாக வழிமாற ஏதுவாக, தற்போதுள்ள மெட்ரோ நிலையத்துடன் புதிய பாதையை இணைக்கும் ஆகாய நடைபாதை (Skywalk) அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பூந்தமல்லி-வடபழனி இடையிலான சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் தனது தமிழகப் பயணத்தின்போது பிரதமர் மோடி, வேலூர் விமான நிலையத்தையும் திறந்துவைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்