சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம்: அமைச்சர் உறுதி

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம்: அமைச்சர் உறுதி

1 mins read
62c09f74-dbc3-489f-8511-3fe809322739
தமிழகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு. - கோப்புப் படம்: நக்கீரன்

சென்னை: சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என நடப்பு தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று தமிழகச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளன்றே தமது கருத்தை வலியுறுத்தியதாக என்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த மரணச் சம்பவம் சாதி ஆணவப் படுகொலை எனத் தெரியவந்தால் உறுதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் பொறுத்தவரை, சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே உறுதியான நிலைப்பாடு என்று திரு வன்னி அரசு கூறினார்.

இந்தக் கருத்தைத்தான் நடப்புச் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே தான் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
அமைச்சர்ஆணவக் கொலைபடுகொலைசட்டம்சட்டமன்றம்விடுதலைச் சிறுத்தைசாதி