சென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார் ஆயுதப்படை பெண் காவலர் தர்ஷிணி. அப்போது சனிக்கிழமை அதிகாலையில் வங்கியின் உள்ளே திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்தது. உடனே தான் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பினார்.
பின்னர், வங்கி வளாகத்தைச் சோதனையிட்டுப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்னர் தான், துப்பாக்கியில் நிரப்பிய தோட்டாக்களை வெளியில் எடுக்க முயன்றார். அப்போது துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது.
தோட்டா அருகே இருந்த சுவரில் பாய்ந்ததால் காவலர் தர்ஷிணி உயிர் தப்பினார். நல்ல வேளையாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


