தமிழக அரசின் கொள்கைக் குறிப்புகளைப் பாராட்டிய அமெரிக்க நிறுவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் கொள்கைக் குறிப்புகளைப் பாராட்டிய அமெரிக்க நிறுவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

படம்: ஊடகம்

17 Sep 2024 - 7:39 pm

1 mins read

சென்னை: ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய தேவைப்படும் உழைப்பை உணர்ந்தே தமிழக அரசு தொடந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாகவே, தாம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் தொடர்பான அனுபவங்களைக் கட்சித் தொண்டர்களுடன் பகிரும்விதமாக கடிதத் தொகுப்பாக அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், தொழில் வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து அமெரிக்க நிறுவனங்களிடம் தாம் விளக்கியதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவற்றை அமெரிக்க நிறுவனத்தார் வெகுவாகப் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

தமது இந்தக் கடிதத் தொகுப்பில், அமெரிக்காவில் தாம் நாள்தோறும் எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களை அவர் விரிவாக விவரித்துள்ளார்.

அமெரிக்காவில் தொழிலதிபர்களுடன் தான் நடத்திய விவாதங்கள், கூகல், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவையான உணவு வகைகள், ஆளில்லா காரில் தாம் மேற்கொண்ட பயணம் உள்ளிட்ட அனுபவங்கள் முதல்வரின் கடிதத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
முதலீடுமுதல்வர் ஸ்டாலின்தொழில்துறைபயணம்