தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து முதல்வா் என்.ரங்கசாமி விளக்கம்

1 mins read
4434b495-9505-4f3d-b929-71500fe9930a
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியுடன் தவெக கட்சித் தலைவர் விஜய். - படம்: தமிழக ஊடகம்

புதுச்சேரி: தமிழகத்தில் நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரைச் சேர்ந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி பேசியபோது, “புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது அதைத் தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னா், புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.

“அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து, கட்சியின் ஆண்டு விழாவில் அறிவித்தேன்.

“அதன்படி, வேலூரில் இருந்து ஏராளமானோா் என்.ஆா். காங்கிரசில் இணைந்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா்.

“நடிகா் விஜய் எனது நண்பா். அவரிடம் பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசுவேன். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தோ்தல் நேரத்தில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

“ஃபென்ஜால் புயலுக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடியை வழங்கியுள்ளது. அந்த நிதி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணமாக வழங்கப்பட்டது,” என்றாா் அவா்.

குறிப்புச் சொற்கள்