தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த முதல்வர்

1 mins read
6b3f2c93-753a-4331-ad74-586e9b292d54
துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையமானது 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

திருவள்ளூர்: தமிழகத்தில் 5 இடங்களில் ஏறக்குறைய 100 கோடி ரூபாயில் ‘மெகா கிளஸ்டர்’ திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற இதற்கான விழாவின்போது, 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது.

இந்தத் துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தின் பொது வசதிகளைச் சென்னை மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

மேலும், திருமுடிவாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரம் தொழில் நிறுவனங்களும் இம்மையத்தால் பயன்பெறும் என்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்