வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைப்பார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைப்பார்

1 mins read
33db7697-8bd1-4d47-b1b5-dd0e6e69207f
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வடசென்னையில் உள்ள திருவெற்றியூர், பெரம்பூர், மாதவரம், ஆர்.கே.நகர், ராயபுரம், திரு.வி.க. நகர், துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய பத்து சட்ட பேரவைத் தொகுதிகளை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் வடசென்னை வளர்ச்சித்திட்டம் என்றார்.

வடசென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் பொருளியல் ரீதியில் நலிவுற்ற மக்களுக்கும் நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தர தமிழக அரசு விரும்புவதாக அமைச்சர் கூறினார்.

அந்த வகையில் பாதுகாப்பான குடிநீர், சிறப்பான கழிவுநீர் வசதி, தடையில்லா மின்சாரம், கல்வி, சுகாதாரம், சமூக உள்கட்டமைப்பு, விளையாட்டு, பாதுகாப்பு, பொழுதுபோக்கு வசதி உள்பட பல்வேறு சிறப்புத்திட்டங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டம் உள்ளடக்கி உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு மேலும் விளக்கம் அளித்தார்.

சென்னை தங்க சாலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று, ரூ.2,096 கோடி மதிப்பீட்டில் 87 திட்டப்பணிகளை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், அத்திட்டங்கள் பல்வேறு துறைகள் சார்பாக மேலும் விரிவடைந்து, தற்போது ரூ.5,779 கோடி மதிப்பில் 225 திட்டங்களாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

குறிப்புச் சொற்கள்