சென்னை: விஸ்வகர்மா திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த முடிவுக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் எனவும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் எனவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத முதல்வர் மு.க.ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது. பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக கைவினைஞர் தலைமுறைக்கு திமுக அரசு அநீதி செய்கிறது,” என தெரிவித்துள்ளார்.

