தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாக்லெட் வடிவில் போதைப்பொருள்

1 mins read
6e317e80-ebf1-41c7-9050-8edd650cc774
சாக்லெட் வடிவில் போதைப்பொருள். - படம்: மாலை மலர்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் சாக்லெட் வடிவில் உள்ள புதுவகை போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

‘ஸ்ட்ராபெர்ரி குவிக்’ எனப்படும் இந்தப் புதியவகை போதைப்பொருள், பள்ளிகளுக்கு அருகே விற்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இச்செய்தி வேகமாகப் பரவிவருகிறது.

வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இதில் ‘மெத்தபெட்டமின்’ போதைப்பொருள் கலந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லெட் போதைப்பொருளினால் இளம் பருவத்திலிருந்தே மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பள்ளிகளுக்கு அருகே விழிப்புடன் கண்காணித்துவருவதாக மாலை மலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வகை போதைப்பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் உண்டுவிட்டால் அதிலிருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை, ஆரஞ்சு போன்ற சுவைகளிலும் இந்த வகை போதைப்பொருள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு சிறாரை அனுப்பும் பெற்றோர் பள்ளிக்கு அருகே அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லெட்டுகளை கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடவேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதனால், விழிப்புடன் செயல்பட்டு போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

குறிப்புச் சொற்கள்