தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா

1 mins read
944a2408-d5a6-4917-bbce-f68f870d7bdc
சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுடன் படமெடுத்துக் கொள்கிறார் விஜய். - படம்: தி இந்து
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திங்கட்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்தான் பதவிப் பிராமணம் செய்து வைக்க உள்ளார்.

வரும் 12ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 13ஆம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் விஜய் கோர உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ் நாடுதமிழக வெற்றி கழகம்சபாநாயகர்