புதுடெல்லி: இந்தியாவில் தூய்மையான காற்றுள்ள நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் நெல்லை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நகரங்களின் காற்றுத்தரம் குறித்த பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதில் தூய்மையான காற்றுள்ள நகரமாக தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை விளங்குகிறது. ஐந்தாவது இடத்தில் தஞ்சை உள்ளது.
தூய்மையான காற்றுள்ள நகரங்களின் முதல் பத்து இடங்களில் நெல்லை (தமிழகம்), நகர்லாகன் (அருணாசலப் பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழகம்), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது. காஷியாபாத் (உத்தரப்பிரதேசம்), பைரனிஹாட் (மேகாலயா), சண்டிகர் (பஞ்சாப்), ஹபூர் (உத்தரப்பிரதேசம்), தனபாத் (ஜார்க்கண்ட்), பாடி (இமாச்சலப் பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உத்தரப்பிரதேசம்), குஞ்சேமுரா (மகாராஷ்டிரா), நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிக அளவு மாசடைந்து கொண்டே வருவது கவலைக்குரிய விஷமாக உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டில் கவலைக்குரிய தரக்குறியீட்டையே பெற்றுள்ளன.

