தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி ஒதுக்கீடு

1 mins read
4f947d70-cca4-4e20-b11a-6d63f4f70fe6
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மொத்தம் ரூ.10,740 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. - மாதிரிப்படம்

கோவை: போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் நோக்கில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மொத்தம் 34.8 கிலோமீட்டர் நீளத்திற்கு இரு பிரிவுகளாக ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கு மொத்தம் ரூ.10,740 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.154 கோடியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

மெட்ரோ திட்டப்பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நில அளவைப் பணிகள் தொடங்கி, அதன்பிறகு வருவாய்த்துறை மூலம் கைய கப்படுத்தும் பணிகள் இடம்பெறும்.

முன்னதாக, கோவை மெட்ரோ ரயில் முதற்கட்டத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ திட்டம் தொடர்பான நடைமுறைகளை விரைவாக முடித்து, பணிகளைத் தொடங்கும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்தல், நிலத்தைக் கையகப்படுத்த திட்டம் தயாரித்தல், சாலை, மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளும் தொடங்கி உள்ளன.

குறிப்புச் சொற்கள்