இன்ஸ்டகிராம் மூலம் வசதியான ஆடவர்களைத் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பணம் சுருட்டிய ஹேசல் ஜேம்ஸ் என்ற பெண்ணை கோவை காவல்துறை கைது செய்துள்ளது.
இன்ஸ்டகிராம் மூலம் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த 44 வயதான ராஜேஷ் என்பவரிடம் இரு குழந்தைகளுக்குத் தாயான தமக்குக் கணவரின் ஆதரவு இல்லை, தொழில் தொடங்க வசதி இல்லை என்று பல்வேறு விதமாகப் பேசி ரூ.20 லட்சம் ரொக்கம், சொகுசு கார், கைப்பேசி என பலவற்றைக் கறந்துள்ளார் ஹேசல் ஜேம்ஸ்.
இந்நிலையில் அவருக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான ராஜேஷ், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ஹேசல் ஜேம்ஸ். இதையடுத்து காவல்துறையிடம் புகார் அளித்தார் ராஜேஷ்.


