கோவை: கேரளாவில் இருந்து எல்பிஜி வாயுவுடன் கோவை நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) அதிகாலை விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த டேங்கர் மட்டுமே சாலையில் விழுந்து, அதிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
எனினும், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதால் வாயுக்கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார்.

