சென்னை: நடிகர் விஜய், மஞ்சள், அடர்சிவப்பு நிறத்தில் தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்தைக் கண்டு, பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளது.
அது ஸ்பெயின் நாட்டுக் கொடி போல் உள்ளது, காப்பி அடித்துள்ளனர் என்று வலைத்தளவாசிகளும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்தச்சூழலில், கட்சிக் கொடி விவகாரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என தமிழக வெற்றிக் கழகம் புதிய முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி யானை சின்னம் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதிலளித்துக்கொள்ளலாம், எதையும் சமாளித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், தங்களது கட்சித் தலைவர் அனைத்து சவால்களையும் திறம்பட எதிர்கொள்வார் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர் நடிகர் விஜய் ரசிகர்கள்.

