லண்டனிலிருந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த லஞ்சப் புகார்

லண்டனிலிருந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த லஞ்சப் புகார்

1 mins read
fab08985-d5bb-4212-9073-7669d8d296ec
லஞ்சப் புகார்களைத் தெரிவிக்க தமிழக அரசு அண்மையில் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. - சித்திரிப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

சென்னை: ஓய்வுபெற்ற அரசுத் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லண்டனில் இருந்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் வந்துள்ளது.

அங்குப் பணியாற்றும் ஆசிரியை சீனித்தாயின் மகன் சதீஷ் அந்தப் புகாரை அளித்துள்ளார்.

ஆசிரியை சீனித்தாய் கடந்த மே மாதம் ஓய்வுபெற்ற நிலையில், ஓய்வூதியப் பலன்களைப் பெற வட்டாரக் கல்வி அலுவலர் முத்துகுமார் என்பவரை அணுகியதாகவும் அவர் தம்மிடம் நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு லஞ்சப் புகார்களைத் தெரிவிக்க அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் ஆசிரியை சீனித்தாயின் மகன் சதீஷ் லண்டனில் இருந்து புகார் மனு அளித்துள்ளார்.

தடையில்லாச் சான்றிதழ் வழங்க அதிகாரியான முத்துகுமார் கேட்ட லஞ்சத்தைக் கொடுத்ததாகவும் ஆனால், தமக்கு இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை‌ என்றும் சீனித்தாய் கூறியுள்ளார்.

இந்தப் புகாரை அதிகாரி முத்துகுமார் மறுத்துள்ள நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்