தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்: திருமாவளவன்

1 mins read
347e2b41-cfa0-4fa4-924b-12e3ecee06d3
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ‘இந்தியக் குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தொல் திருமாவளவன்,

அரசமைப்புச் சட்டம் அனைத்துத் தளங்களிலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக இருக்க முடியும் என்ற சூழல் ஏன் நீடிக்கிறது? அங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நெருக்கடியை எது தருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்தியாவில் சாதி பார்க்காமல் எந்தச் செயலும் மனித குலத்தில் இல்லை. இதன்மூலம் சனாதன சட்டமே இங்கு இயங்குகிறது, அரசமைப்புச் சட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. சமூக நீதி மூலமாகவே சமூக ஜனநாயகத்தை கொண்டு வரமுடியும் என்று திருமா கூறியுள்ளார்.

முன்னேறிய சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்று சட்டத்தைக் கொண்டு வந்து சமூக நீதியை கேள்விக் குறியாக்கியிருக்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமாகவே குடியரசைப் பாதுகாக்க முடியும் என்று திருமாவளவன் பேசினார்.

குறிப்புச் சொற்கள்