சென்னை: கடந்த மார்ச் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 9.21 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8,699,344 பேரும், பிப்ரவரியில் 8,665,803 மெட்ரோ ரயலில் பயணம் மேற்கொண்ட நிலையில், மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 9,210,069 ஆக அதிகரித்துள்ளது.
மார்ச் 7ஆம் தேதி ஆக அதிகமாக 345,863 பேர் பயணம் செய்து உள்ளனர்.
இதையடுத்து, பயணிகளுக்குச் சிறப்பான சேவையை வழங்குவதில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
“சென்னை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பான, நம்பகத்தன்மையான, நிலையான கூட்டாளியாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திகழ்ந்து வருகிறது.
“தற்போது, மெட்ரோ பயண அட்டைகளைக், கைப்பேசி கியூஆர் கோட், வாட்ஸ்அப், பேடிஎம், போன்பே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் 20% கட்டணச் சலுகையும் கிடைக்கும்,” என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.