அரசு விழாவில் மேடையில் நடனமாடிய உயர் கல்வித்துறை அமைச்சரால் சர்ச்சை

அரசு விழாவில் மேடையில் நடனமாடிய உயர் கல்வித்துறை அமைச்சரால் சர்ச்சை

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

22 Jun 2026 - 5:17 pm

1 mins read

மதுரை: அரசுப்பள்ளியில் நடைபெற்ற முதல்வர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மேடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், தாம் நடனம் ஆடியதில் எந்தவிதத் தவறுமில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட விஸ்வநாதன், மேடை ஏறியதும் முதல்வர் விஜய் நடித்த ‘சச்சின்’ என்ற திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்டு உற்சாகமடைந்த தவெகவினர் நடனமாட, மேடையில் இருந்த அமைச்சரும் உற்சாகமாகிவிட்டார்.

அடுத்து, தவெக பெண் நிர்வாகிகள் சிலர் மேடையிலேயே நடனமாட, அமைச்சரும் பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளை வெளிப்படுத்த, பாடல் முடியும் வரை உற்சாகம் நீடித்தது.

இதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.

உயர் கல்விக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு அமைச்சரே முதல்வரின் பாடலுக்கு குத்தாட்டம் ஆடலாமா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளையர்கள் தங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர். அதனை ஏற்று நடனமாடியதில் எந்தத் தவறுமில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தவெகமுதல்வர்விஜய்அமைச்சர்நடனம்சர்ச்சைபிறந்தநாள்