காப்புரிமை விவகாரம்: இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சியம்

1 mins read
a193009f-0569-4609-841e-3434f6b4ca98
இசையமைப்பாளர் இளையராஜா (இடது), இயக்குநர் ஆர். கே. செல்வமணி. - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: ​பாடல்​களின் காப்புரிமை தொடர்​பான வழக்​கில் இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு ஆதர​வாக, இயக்​குநர் ஆர்​.கே. செல்​வ​மணி நீதி​மன்​றத்​தில் சாட்சியம் அளித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ‘மியூசிக் மாஸ்​டர்’ என்ற இசை வெளி​யீட்டு நிறு​வனம் 2010ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடர்ந்​தது.

அதில், “இளை​ய​ராஜா இசையமைத்த பாண்​டியன், குணா, தேவர் மகன், பிரம்மா உள்​ளிட்ட 109 ​படங்​களின் பாடல்​களின் இசை வெளி​யீட்டு உரிமை​யை, இளை​ய​ராஜா​வின் மனைவி ஜீவா நடத்தி வந்த இசை நிறு​வனத்​திட​மிருந்து தங்களது நிறு​வனம் பெற்​றுள்​ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும், “எங்​களின் அனு​ம​தி​யின்றி அந்​தப் படத்​தின் பாடல்​களை யூடியூப் உள்​ளிட்ட சமூகத்தளங்களில் யாரும் பயன்​படுத்​தக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்​டும்,” எனத் தங்களின் மனுவில் அது கோரி​யிருந்​தது.

இவ்வழக்​கில் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே முன்னிலையாகி சாட்​சி​யம் அளித்​த நிலை​யில், திரைப்பட இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான ஆர்​.கே.செல்​வ​மணி ஜனவரி 8ஆம் தேதி முன்னிலையாகி சாட்​சி​யம் அளித்​தார்.

அப்​போது அவர், “இளை​ய​ராஜா தான் இசையமைத்​துள்ள பாடல்​களின் காப்புரிமையை என்​றும் தயாரிப்​பாளர்​களுக்கு வழங்​கியது இல்​லை. அந்​தப் பாடல்​களின் காப்புரிமை இளை​ய​ராஜா​விடம்​தான் உள்​ளது.

சம்​பந்​தப்​பட்ட படத்​தில் அந்​தப் பாடல்​களைப் பயன்​படுத்​து​வதற்​கான உரிமை மட்​டுமே தயாரிப்​பாளர்​களுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்று சாட்​சி​யம் அளித்​தார்.

குறிப்புச் சொற்கள்