சாலைகளில் வலம் வரும் கால்நடைகள் குறித்து நீதிமன்றம் உத்தரவு

சாலைகளில் வலம் வரும் கால்நடைகள் குறித்து நீதிமன்றம் உத்தரவு

படம்: இந்து தமிழ் திசை

18 Nov 2026 - 4:16 pm

1 mins read

சென்னை: திருவேற்காடு பகுதியில் சாலைகளில் வலம் வரும் கால்​நடைகளால் அடிக்​கடி வாகன விபத்​து ஏற்​படுவதுடன், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​படுவ​தாகக்​கூறி வழக்​கறிஞர் காமேஷ் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், சாலைகளில் கேட்​பாரின்றி சுற்​றித்​தி​ரியும் கால்​நடைகளை பறி​முதல் செய்ய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளதைக் குறிப்பிட்டனர்.

அதன்​படி பொதுப் போக்​கு​வரத்​துக்கு இடையூறாகத் ​தி​ரியும் கால்​நடைகளின் உரிமையாளர்களுக்கு முதன்​முறை ரூ. 2 ஆயிர​மும், அடுத்​தமுறை ரூ. 5 ஆயிர​மும் அபராதம் விதிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்துக்​குள் யாரும் உரிமை கோராவிட்​டால், அவற்றைப் பறி​முதல் செய்து ஏலம் விடலாம்.

கால் நடைகளின் உரிமையாளர்​களுக்கு 3 ஆண்​டுகள் வரை சிறை மற்​றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​க சட்​டத்​தில் வழிவகை உள்​ளது.

“இந்த விவகாரம் தொடர்பாக திரு​வேற்​காடு நக​ராட்சி நிர்​வாகம் பரிசீலித்துத் தகுந்த நட​வடிக்கை எடுக்க வேண்டும்; சாலைகளில் திரியும் கால்​நடைகளை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும்; அவைகளுக்கான பராமரிப்பு செல​வை உரிமையாளரிட​ம் வசூலிக்க வேண்​டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“கால்நடைகளின் உரிமையாளர்​கள் மீது காவல்துறை வழக்​குப் ப​திவு செய்யலாம். இந்த உத்​தரவை டிஜிபி உட்பட, அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​களும் நான்கு வாரக் காலத்​துக்​குள் அமல்​படுத்த வேண்​டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்