தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவு

1 mins read
bd378ea6-3c0a-4217-bb9e-dee34aa5521d
சென்னையின் கூவம், அடையாறு நதிகள், பக்​கிங்​ஹாம் கால்​வாய்​ ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: சென்​னை​யில் உள்ள கூவம், அடை​யாறு ஆறுகள், பக்​கிங்​ஹாம் கால்​வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

சென்​னை​யில் உள்ள நீர்நிலைகளைப் பழமை மாறாமல் பாது​காக்​கக்​கோரி வி.க​னகசுந்​தரம் என்​பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, நீர்நிலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றவும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கூவம் ஆற்றை முழு​மை​யாகச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாத அதிகாரிகள்மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் அதிகாரிகளுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்ளனர்.

“நீர்​நிலைகளில் ஒரு​போதும் ஆக்​கிரமிப்​பு​களுக்கு அனு​மதி வழங்கக்கூடாது என உச்ச நீதி​மன்​ற​மும் உயர் நீதி​மன்​ற​மும் பல்​வேறு தீர்ப்​பு​களில் தொடர்ச்​சி​யாக உத்தரவுகளைப் பிறப்பித்து வரு​கின்றன. சென்​னை​யில் உள்ள கூவம், அடை​யாறு ஆறுகளும் பக்​கிங்​ஹாம் கால்​வாயும் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பில் உள்​ளன.

“கூவம் நதி சுற்​றுச்​சூழல் மறுசீரமைப்பு திட்​டம், அடை​யாறு, பக்​கிங்​ஹாம் கால்​வாய் புனரமைப்பு போன்ற திட்​டங்​களின் மூல​மாக நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற நடவடிக்கை எடுத்​தா​லும், மீண்​டும் புற்​றீசல் போல ஆக்​கிரமிப்​பு​கள் பெருகி வரு​கின்​றன.

“குறிப்​பாக, அடை​யாறு கடலில் கலக்​கும் கழி​முகம் உள்ள பட்​டினப்​பாக்கம் சீனி​வாசபுரத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடு​கள் கரையோரங்​களை ஆக்​கிரமித்துக் கட்​டப்​பட்​டுள்​ளன,” என்று நீதிமன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்