நித்தியானந்தா மீது நீதிமன்றம் காட்டம்

நித்தியானந்தா மீது நீதிமன்றம் காட்டம்

1 mins read
ad8db597-505f-4a6e-814a-73af57da0495
இந்திய நீதித்துறைக்கு நித்தியானந்தா சவால் விடுவதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.  - படம்: இணையம்

மதுரை: இந்திய நீதித்துறைக்கு நித்தியானந்தா சவால் விடுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில அபகரிப்பு புகார் தொடர்பில் தனக்கு முன் பிணை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, நித்தியானந்தாவின் சீடர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது, சுரேகாவுக்கு முன் பிணை தரவேண்டும் என நித்தியானந்தாவின் ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார். அவருக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளில் அழைப்பாணை உள்ளது. ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. முதலில் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகச் சொல்லுங்கள். நித்தியானந்தா சொத்துகளை இந்தியன் நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

கர்நாடக மாநில, பிடரியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்தவர் நித்தியானந்தா. இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். இவருக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன.

இவருக்குச் சீடர்கள் அதிகம். இந்த நிலையில் பெங்களூருவில் பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார். இன்றுவரையில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.

குறிப்புச் சொற்கள்