சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 66 பேர் ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, 60 வயது முதியவர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் 182 பேருக்கும் கர்நாடகாவில் மே 21ஆம் தேதியன்று, 16 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதை அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உறுதி செய்தார்.
மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் டெல்லியில் 23 பேருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் புதிய கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஹரியானாவில் மூன்று தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
இதுவரை பாதிக்கப்பட்ட பலருக்கு கடும் அறிகுறிகள் ஏதுமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான மோகன் என்பவர் கொரோனா தொற்று பாதிப்புக்காக அங்குள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொரோனா தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அம்மாநில அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மருத்துவமனையில் படுக்கைகள், உயிர்வாயு, அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

