தமிழகத்தில் 52,128 புதிய தொழில் முனைவர்கள் உருவாக்கம்

1 mins read
cc970ff1-721d-48e9-884e-df10ea020691
சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கடந்த மூன்றரை ஆண்டுகளில் 52,128 புதிய தொழில்முனைவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி, ‘சிட்கோ’ அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 23) சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மாவட்ட தொழில் மைய மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

“ஐந்து வகையான சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் பட்டியல் சமூகத்தினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் கடன்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

“கடந்த மூன்றரை ஆண்டுகளில், ரூ.1,805 கோடி மானியத்துடன் ரூ.4,601 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 52,128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்,” என்றார் அமைச்சர் அன்பரசன்.

குறிப்புச் சொற்கள்