ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: விஜய் அறிவிப்பு

ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: விஜய் அறிவிப்பு

கோப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

16 Jun 2026 - 7:56 pm

1 mins read

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

நூறு விழுக்காடு தள்ளுபடி அறிவிப்பால் சிறு, குறு விவசாயிகள் பெருமளவு பயனடைவர் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் 25ஆம் தேதி கடன் தள்ளுபடிக்கான உச்ச வரம்பை ரூ.50,000ஆக நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இந்த வரம்பை உயர்த்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாக குரல்கொடுத்தன.

இதையடுத்து, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம், வளர்ச்சித் துறை அமைச்சர்கள், அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் விஜய்.

பின்னர் கடன் உச்ச வரம்பை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன் மூலம், கூட்டுறவு வங்கிகளில் 2025ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.6,000 கோடி வரை தள்ளுபடி செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்