தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய இணையக் குற்றவாளிகளுடன் கூட்டு: இரு பெண்கள் உட்பட ஏழு பேர் தமிழகத்தில் கைது

2 mins read
9dd0d11e-b649-4690-ac78-0031895b5389
கைதான ஏழு பேர் மீது இந்தியா முழுதும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மலேசியாவில் இருந்தபடி இணையம் மூலம் மின்னிலக்க குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட ஏழு பேரை சென்னை காவல்துறை கைது செய்தது.

தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இந்த மோசடிக் கும்பலுக்கு முகவர்களைப் போல் செயல்பட்டதும், வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து பணம் பெற்றதாகவும் தெரியவந்தது.

மாநில இணையக் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டலுக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.

மலேசிய கும்பலுக்கு உதவிய முகவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், 48 வயதான பைசுனிஷா என்ற பெண் மூலம் மோசடி செயல்களுக்கு ஆள்களை நியமித்த பாய்ஸ்கான் (58) என்பவர் சிக்கினார்.

விசாரணையில் மதுரையில் உ ள்ள வங்கியில் பணியாற்றும் சேதுராமன் (29) என்பவர் தங்களுடன் கூட்டுச் சேர்ந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கிக் கணக்குகள் துவங்க உதவி செய்தததையும் அவருக்கு இதற்காக நிறைய பணம் கொடுக்கப்பட்டதையும் பாய்ஸ்கான் தெரிவித்தார்.

மேலும் 34 முதல் 41 வயதுக்குட்பட்ட செல்லத்துரை, தேவி, அன்சாரி ஃபாசில் ஆகியோரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு, கூலி வேலை செய்யும் பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் துவங்கியுள்ளனர்.

பின்னர் இந்தக் கணக்குகளை இணையக் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு விடுவர் என்றும் பாய்ஸ்கான் தெரிவித்தார். இதையடுத்து கைதான அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது இந்தியா முழுதும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்