தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் 35 சென்டிமீட்டர் மழை பெய்யுமென எச்சரிக்கை

1 mins read
பேருந்துகள் இயங்கவில்லை
15144971-68b1-4401-819f-8854d8a9c1c0
சென்னையில் அரசுப் போக்குவரத்துப் பேருந்துச் சேவைகள் நிறுத்தம். - படம்: ஊடகம்

சென்னை: புயல் தாக்கம் காரணமாக, சென்னையில் 35 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

‘ஃபெங்கல்’ புயல், அடுத்த சில மணி நேரங்களில் அதி தீவிரப் புயலாக மாறி, கரையைக் கடக்கும்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை (நவம்பர் 30) அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், குறுகிய நேரத்தில் 35 சென்டிமீட்டர் மழை பொழியக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மெட்ரோ ரெயில் சேவைகள் தாமதம் இல்லாமல் இன்று வழக்கம்போல் தொடங்கப்பட்டுள்ளன என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்