தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனி கோவில் ராஜகோபுரம் சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி

1 mins read
929ef50e-d0de-4811-ae2b-458284ed1771
சேதமடைந்துள்ள ராஜகோபுரம். - படம்: ஊடகம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலின் ராஜகோபுரம் சேதமடைந்து இருப்பதாக வெளியான தகவல் ஆன்மிக அன்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் இக்கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தேறியது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள சிறு பகுதி உடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து, சேதமடைந்த பகுதியை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகம் கோபுரம் விரைவில் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

“கோபுரம் சேதமடைந்து இருப்பதால் பரிகாரப் பூசை நடத்தப்படும். மேலும் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் குடமுழுக்கு நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். எனவே, பக்தர்கள் கவலைப்பட வேண்டாம்,” என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்