காலை உணவில் பல்லி; 14 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை

1 mins read
2c7134ee-d535-4a5e-a5f8-613b937a3306
நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன். - படம்: தமிழக ஊடகம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்ரவரி 6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைச் சிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்ததைப் பாா்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கலில் பல்லி கிடப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் மயில்வாகனன், மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்தும்படி கூறி, உடனடியாக அவர்கள் அனைவரையும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்க உத்தரவிட்டார். அங்கு மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாணவர்களிடம் நலம் விசாரித்தார். ஆட்சியருடன் கல்வித் துறை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்