தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராளி மரணம்

1 mins read
093a36b5-82f9-4aaa-a3e9-41413302ab91
திவ்யா. - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தீவிரமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திவ்யா உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

35 வயதான அவர், திங்கட்கிழமை மாலை திடீரென்று உயிரை மாய்த்துக் கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஒன்பது முறை ஊராட்சித் தலைவர், உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியவர் திவ்யா.

இவர் ஏற்கெனவே உடல்நலம் குன்றி இருந்ததாகவும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதால் திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் இம்முடிவை எடுத்ததாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்