சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மநீம கட்சி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சனாதன தர்மம் தொடர்பாக சில கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.
இது குறித்து ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தேவையின்றி சனாதன தர்மம் குறித்துப் பேசுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யூடியூப் ஒளிவழிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்திருப்பதுடன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மநீம துணைத் தலைவர் மவுரியா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ரவிச்சந்திரன்.