தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொலை மிரட்டல்: ராமதாஸ் புகார்

1 mins read
f16e7528-997d-4475-a558-d928d6894123
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமது தனிச்செயலாளர் சுவாமிநாதனுக்கு ஒருதரப்பினரிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், தனது தனிச் செயலாளரான சுவாமிநாதனுக்கும் தம்மிடம் பணியாற்றுபவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஏற்கெனவே என் வீட்டில், ஒட்டுக்கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சுவாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மிரட்டல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

“இப்படிப்பட்ட அநாகரிகமான செயல்களை, ஒரு கும்பல்தான் திட்டமிட்டுச் செய்து வருகிறது. சுவாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறையினரைக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் என்னுடன் இருப்போர் அஞ்ச மாட்டார்கள், நானும் அஞ்ச மாட்டேன்,” என்றார் ராமதாஸ்.

குறிப்புச் சொற்கள்