சென்னை: தமிழ் நாடு அரசின் சமூக நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் வசிக்கும் மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்திட்டத்தின்மூலம் ஏறக்குறைய 1,400 மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பப் பயிற்சி உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
அத்துடன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் மாணவிகளுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகளைக் கண்காணிக்கவும் இக்குழுவினருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

