சென்னை: அனைவராலும் விரும்பப்படும் காவியமான இந்த நாட்டில் உள்ள பொதுத் துறைகள் யாவும் இப்போது காவி மயமாக்கப்படுகின்றன. அது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சின்னங்களைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் சின்னத்தையும் மத்திய அரசு காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த சின்னத்தில் ‘இந்தியாவை இணைப்போம்’ என்று அச்சிடப்பட்டிருந்தது. இப்போது ‘பாரதத்தை இணைப்போம்’ என மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சின்னத்தில் உள்ள நிறங்கள் பாஜக கொடியின் நிறத்தைப் போல் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம்தான் தென்படுகிறது என்று திரு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழ் நாடு அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தது. அப்போதும் திரு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

