சென்னையில் டெங்கி பாதிப்பு இருமடங்கானது

சென்னையில் டெங்கி பாதிப்பு இருமடங்கானது

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

01 Oct 2026 - 2:35 pm

1 mins read

சென்னை: சென்னையில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தமிழகச் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட்டில் 605 பேரிடம் டெங்கித் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,290ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் நடப்பாண்டில், கடந்த வாரம் வரை ஏறக்குறைய 18,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் புதன்கிழமை (செப்டம்பர் 30) 72 பேரிடம் டெங்கி கண்டறியப்பட்டது.

டெங்கி அறிகுறிகள் இருந்தால் மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவைவிட பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கி விரைவாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பகலிலும் முழுக்கை சட்டை அணிதல், களிம்பு பூசிக்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்