குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் மோதல்

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் மோதல்

1 mins read
d183402c-449b-48d2-aa5b-8f94173488c6
கம்பாலும் கைகளாலும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். - படம்: தமிழக ஊடகம்

குலசேகரன்பட்டினம்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 3ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, கோயில் அருகில் உள்ள கடற்கரையில் புனித நீர் எடுக்க சென்றனர்.

அப்போது இருதரப்பு பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.

கம்பாலும் கைகளாலும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதனால் அந்த இடத்தில் பதற்றநிலை நிலவியது.

இறை வழிபாட்டில் ஈடுபட வந்த மற்ற பக்தர்கள் இந்த எதிர்பாரா மோதலைப் பார்த்து பதறி கூச்சலிட்டனர்.

உடனே இரு தரப்பினரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

கடற்கரையில் பக்தர்கள் மோதிக்கொண்டதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.

கோயிலுக்கு சாதி அடையாளத்துடன் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று ஏற்கெனவே காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து கோயில் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் காவல்துறையினர் மிக உன்னிப்பாகக் கண்காணித்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்