தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் நீக்கம்

1 mins read
540cdbfd-9625-4b14-a316-47b6a9c3aaa9
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அன்பழகன் மூன்று மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். - கோப்புப் படம்: ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த அன்பழகன், 59, என்பவர் 9ஆம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகத் தெரிகிறது.

இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மாணவிகள் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆசிரியர் அன்பழகனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அன்பழகன் இன்னும் 3 மாதத்தில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்