தமிழ்நாட்டில் மகளிர் காங்கிரசின் அமைப்புகள் கலைப்பு

தமிழ்நாட்டில் மகளிர் காங்கிரசின் அமைப்புகள் கலைப்பு

1 mins read
a33ba83c-7f13-4c67-8f88-040dc631e316
தமிழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள காங்கிரஸ் அமைப்புகள் கலைக்கப்படுவதாக மகளிர் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் பிரிவு மாநிலத் தலைவி சையத் அசினா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பா உத்தரவுப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன. அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின்படி புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்