தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவுடன் ஐக்கியமாக திமுக தயாராகிறது: அதிமுக

1 mins read
a4166e36-5ee3-49d0-b6c9-c1a231c90cdd
முன்னாள் அதிமுக அமைச்­சர் ஜெயக்­கு­மார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: “2026ஆம் ஆண்டுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சிக்குத் தனது முழு ஆதரவையும் அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளைப் பெறுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருகிறது,” என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பாஜகவுடன் ஐந்து ஆண்டு, முழுமையாக அந்த ஆட்சியினுடைய சுவையை அனுபவித்த திமுக அதன்பிறகு, அவர்களைக் கழற்றி விட்டனர். 1998ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால், காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமைக்கான பிரச்சினைக்கு மத்திய அரசு அன்று செவிசாய்க்காத சூழலில் அதிமுக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா மீட்டுக் கொண்டார். அதனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

மறைந்த முதல்வர் கருணாநிதி பாஜக ஒரு மதவாத சக்தி, எந்தக் காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மூன்று மாதங்களாகக் கூறி வந்தார். பின்னர், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் திமுக ஆட்சி சுகத்தை அனுபவித்தது. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே இரட்டை வேடமிடும் கட்சி என்று திரு ஜெயக்குமார் சாடியுள்ளார்.

“திமுக தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வருகின்றனர். திமுக-பாஜக இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. 2026க்காக காத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்கள் மத்திய அமைச்சர் பதவியில் இல்லை என்ற அதிகாரப்பசி திமுகவுக்கு வந்துவிட்டது. எனவே, 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக பாஜகவுடன் சென்று ஐக்கியமாகிவிடும்,” என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்