சென்னை: திமுகவை எதிர்ப்பவர்கள் எப்படிப்பட்ட கூட்டணியுடன் வந்தாலும், அவர்களை திமுக ஒருகை பார்க்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகிற்கே வழிகாட்டும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
திமுகவினர் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.
“2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதி என்ன, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
“வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை என யாராக இருந்தாலும் கவலையில்லை. நாம் நெருக்கடியைப் பார்த்து வளர்ந்துள்ளோம். எனவே ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமையும்,” என்றார் ஸ்டாலின்.
கடந்த காலங்களில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம், தற்போது கம்பீரமாக நடந்து செல்கிறது என்றார் முதல்வர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகக் குறிப்பிட்டே முதல்வர் இவ்வாறு பேசியதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
“சட்டப்பேரவையில் நான் இவ்வாறு பேசியபோது, அதிமுக உறுப்பினர்கள் அப்படியே கடந்து சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் தானாக வந்து சிக்கிக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்க்கட்சி துணைத் தலைவர் ‘ஊர்ந்து’ என்று சொல்ல வேண்டாம் என்றார். நான் ‘தவழ்ந்து’ எனப் போட்டுக்கொள்ளுமாறு கூறினேன்.
“தற்போது தவழ்ந்து, தவழ்ந்து முதல்வர் ஆனேன் என பழனிசாமி கூறிய காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது,” என்றார் ஸ்டாலின்.

