சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவைப் பற்றி விமர்சிக்கவில்லை என்பதால், அவரைப் பற்றி அதிமுகவினரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் பேசியபோது, தங்களோடு கூட்டணி சேரும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அறிவித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், அம்மாநாட்டில் பாஜக, திமுக கட்சிகளை விமர்சித்து, தனது கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்பதையும் விஜய் சுட்டிக்காட்டியிருந்தார்.
எம்ஜிஆரையும் பாராட்டிப் பேசியிருந்த நிலையில், அவரைப் பற்றி அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்,” என்று பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.