ஓட்டுநர் இல்லா ரயில்கள் சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பு

1 mins read
e9c1d689-e1bd-422d-a016-58891df81d6b
மெட்ரோ ரயில். - படம்: ஊடகம்

சென்னை: ஓட்டுநர் இன்றி இயங்கும் முதலாவது ரயில் சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெங்களூரில் வடிவமைக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள ஆலையில் மெட்ரோ ரயில்கள் தயாராகி வருகின்றன. அவற்றுள் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதலாவது தொகுப்பு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த ரயில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பயன்படுத்தப்படும். மொத்தம் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும் என்றும் 28 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதலாவது கட்டத்தில் 208 ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி கடந்த 2010 ஆம் ஆண்டு ஆல்ஸ்டாம் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ரூ.1,130 கோடியில் ரயில்கள் தயாரிப்பு, ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியும் இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளுக்கு மனநிறைவான பயண அனுபவத்தையும் இந்த புதிய ரயில் பெட்டிகள் வழங்கும் என ஆல்ஸ்டாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்