தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்தல்: முன்னாள் டிஜிபி மகன் கைது

1 mins read
9bfc2f59-e0c7-4d49-a3d2-68bc09fb90e0
படம்: - பிக்சாபே

சென்னை: போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னாள் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) ரவீந்திர நாத்தின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளும் காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி யின் மகன் அருண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த மேலும் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்