லஞ்ச ஒழிப்பு அதிகாரிக்கே லஞ்சம் கொடுத்த ஆர்டிஓ

1 mins read
0ec2544b-8b91-4553-ae85-cdc3d81d2b21
லஞ்சம். - படம்: ஊடகம்

சேலம்: சேலம், கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், 58. இவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ரவிக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புக் காவலர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, முரங்கம், வேதபிரியன் காட்டில் உள்ள சதாசிவம் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அதுபற்றி காவலர்கள் கூறுகையில் “சதாசிவம் 7,000 சதுர அடியில் வீடு கட்டியுள்ளார். அவரிடம் 21 வங்கிக் கணக்குகள், நான்கு கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள், டிராக்டர் ஆகியவை உள்ளன.

“வீட்டில், 2.68 லட்சம் ரூபாய், 68 சவரன் நகைகள் இருந்தன. மேலும், அவரின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

“லஞ்சம் பெறும் கணக்கு விபரம், துண்டுச் சீட்டுகள் இருந்தன. அதில் மாதந்தோறும், 15 லட்சம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்க, 10 பேர் தரகர்களாக செயல்பட்டது தெரிந்தது. வங்கியில், 3 பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளன. அதன் சாவியை எடுத்துள்ளோம். அதில் என்ன உள்ளது என கண்டறிய நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளோம்,” என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்