வெற்று வேட்பாளர்கள்: சீமான் குற்றச்சாட்டு

மதுராந்தகம்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் திமுகவும் பாஜகவும் ‘டம்மி’ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

புதன்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது என்பதால் எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களும் வெற்றியைக் குறிவைத்து வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

எப்போதும்போல, நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்துக் களம் காண்கிறது. தமிழ்நாட்டில் 39, புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 20 பேர் எனச் சம உரிமை அளித்து அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஒற்றை விழுக்காட்டில் வாக்குகளைப் பெற்றபோதும் ஏறுமுகத்திலேயே இருந்ததால் இம்முறை எதிர்பார்க்கப்படும் கட்சிகளில் ஒன்றாக அது உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெற்றிபெறும் வகையில் திமுகவும் தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழி வெற்றிபெறும் வகையில் பாஜக கூட்டணியும் ‘டம்மி’ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகச் சீமான் சாடியுள்ளார்.

“கோயம்புத்தூரில் அண்ணாமலையைத் தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. வேலை செய்யாதீர்கள் எனத் திமுக கூறியுள்ளது. இதனை மறுக்க முடியுமா? அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தொகுதியிலேயே இல்லை. திருப்பூரில் பொதுக் கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் ஏன் கோவையில் நடத்தவில்லை?” என்று சீமான் கேட்டார்.

அதுபோல், “தூத்துக்குடியில் கனிமொழிக்காக தமிழ் மாநில காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து, பாஜக ‘டம்மி’ வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அனைத்தும் நாடகம்,” என்று அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால் ஒரு தொகுதியில்கூட வைப்புத்தொகை வாங்க முடியாது என்று சீமான் குறிப்பிட்டார்.

பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் அவசர மருத்துவ வாகனம் செல்ல, “தேர்தல் நேரத்தில் ஆம்புலன்ஸ் சென்றாலே பயமாகத்தான் உள்ளது,” என்றார் அவர்.

நோயாளிகள் செல்லவேண்டிய ஆம்புலன்சில் எத்தனை கோடி ரூபாய் செல்கிறதோ என்று அவர் சொன்னார்.

“நாட்டு மக்களுக்குத் தண்ணீர்கூட தர முடியவில்லை என்றால் அது அரசு அல்ல, அது வெறும் தரிசு. தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள்கூட சுடுகாடுபோல் இருக்கும். ஆனால், சமாதிகள் மாளிகைபோல் ஒளிரும்,” என்றார் சீமான்.

இவை அனைத்தையும் வாக்காளர்கள் தங்கள் ஒற்றை விரலால் மாற்றிப் போட முடியும் என்ற அவர், தமது கட்சிக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!