தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும்: சீமான்

1 mins read
10483d98-896c-480f-a2e0-ef06837dbc01
ரஜினிகாந்த் மற்றும் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காகத்தான் என்றார் சீமான். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

“முதல்வர் வெளிநாடு செல்வதால் அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும். ரஜினிகாந்த் மற்றும் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காகத்தான்.

“எடப்பாடி பழனிசாமியைத் தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக் கூடாது. தற்போது இருப்பவர்களில் பழனிசாமிதான் புத்திசாலி. தமிழர்களான தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்காமல், தமிழரல்லாத எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது ஏன்?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்