தேர்தல் களம் 2026: வீரப்பனின் மனைவி, மகள் போட்டி

தேர்தல் களம் 2026: வீரப்பனின் மனைவி, மகள் போட்டி

1 mins read
354d1bc3-ae6e-4c9a-832c-b47e2151456d
வீரப்பனின் மகளான வித்யாராணி, மறைந்த தனது தந்தை சந்தனக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தை கையில் பிடித்துள்ளார். - படம்: தினமணி

கிருஷ்ணகிரி: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை ஒரு சுவாரசியமான திருப்பமாக, மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவியும் மகளும் வெவ்வேறு தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

வீரப்பன் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இந்தத் தேர்தலில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கிருஷ்ணகிரி தொகுதியிலும், மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முத்துலட்சுமி ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு அரசியலில் தடம் பதித்தவர்.

தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வீரப்பனின் மகளான வழக்கறிஞர் வித்யாராணி, 36, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

தற்போது சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளார்.

இருவருமே தேர்தல் களத்திற்குப் புதியவர்கள் அல்ல என்பதால், அவர்கள் போட்டியிடும் பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களிடையே இவர்களுக்கு ஓரளவிற்கு ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்கள் பணிக்காகத் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்